December 13 , 2025
8 days
92
- மறுசீரமைப்புச் செயல்முறைக்குப் பிறகு தமிழ்நாட்டில் மொத்தம் 75,035 வாக்குச் சாவடிகள் உள்ளன.
- இது முந்தைய 68,467 நிலையங்களிலிருந்து 6,568 அதிகரிப்பு ஆகும்.
- மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பிறகு, மொத்தம் 6,648 நிலையங்கள் உருவாக்கப் பட்டு, 80 நிலையங்கள் இணைக்கப்பட்டன.
- 2,509 வாக்குச் சாவடிகளுக்கான இடம் மாற்றப்பட்டாலும், சுமார் 7,752 இடங்களில் அந்தப் பிரிவுகளின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப் பட்டது.
- ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதோடு மேலும், ஒரு வாக்குச்சாவடி இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும்.
- காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், கோயில்கள் அல்லது சமயம் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் எந்த ஒரு வாக்குச்சாவடியும் நிர்ணயிக்கப் பட வில்லை.
Post Views:
92