2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 8,000 புதிய வாய்ப் புற்றுநோய்கள் பதிவாகியுள்ள நிலையில் தாமதமாகக் கண்டறிதல் மற்றும் புகையற்றப் புகையிலைப் பயன்பாடு அதிகரிப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத் திட்டத்தின்படி, பெண்களை விட (1,00,000க்கு 5.4) ஆண்களில் (1,00,000 க்கு 11.6) அதிகமாக உள்ளது.
உலகளாவிய வாய்ப் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள நிலையில் இதற்கு புகையிலை மெல்லுதல், குட்கா, கைனி, ஜர்தா, பாக்கு மற்றும் பீடி புகைத்தல் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 70–80% பாதிப்புகள் முதிர்ச்சியான நிலைகளில் கண்டறியப் படுவதால் ஐந்து வருட உயிர்வாழ்வு விகிதம் சுமார் 50% ஆக உள்ளது.