TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் வேளாண் துறை நிலை 2025

December 19 , 2025 4 days 69 0
  • வேளாண்மை என்பது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பலவீனமான பிரிவாகும் என்பதோடு மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், 2023–24 மற்றும் 2024–25 ஆகிய ஆண்டுகளில் அதில் எதிர்மறையான வளர்ச்சி பதிவானது.
  • இது இந்திய மாநிலங்கள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரக் கையேட்டை அடிப்படையாகக் கொண்டது.
  • வேளாண் செயல்திறன் பலவீனமாக இருந்த போதிலும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் துறைகளின் வலுவான செயல்திறன் காரணமாக இம்மாநிலத்தின் பொருளாதாரம் நன்றாக வளர்ந்துள்ளது.
  • மொத்த உணவு தானிய உற்பத்தி (அரிசி, பருப்பு வகைகள் மற்றும் பருமணிகள்) 107 முதல் 120 லட்சம் டன்கள் வரை இருந்தது.
  • கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, 2021–22 ஆம் ஆண்டில் அதிகபட்ச உற்பத்தி 119.98 லட்சம் டன்களாகவும், குறைந்தபட்ச உற்பத்தி 2023–24 ஆம் ஆண்டில் 107 லட்சம் டன்களாகவும் இருந்தது.
  • இந்த மாநிலத்தில் அரிசி முக்கிய உணவு தானியமாக உள்ளது, அதைத் தொடர்ந்து பருமணிகள், குறிப்பாக சிறு தானியங்கள், பருப்பு வகைகள் இதில் ஒரு சிறிய பங்கை மட்டுமே வழங்குகின்றன.
  • அரிசி மற்றும் பருமணிகளின் உற்பத்தி என்பது பல ஆண்டுகளாக பெரும்பாலும் நிலையானதாகவே உள்ளது.
  • 2014–15 ஆம் ஆண்டில் 7.5 லட்சம் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, தற்போது சுமார் 3.6 லட்சம் டன்னாகக் குறைவாக உள்ளது.
  • பருத்தி, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற உணவு அல்லாத பயிர்களின் உற்பத்தி குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது.
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி ஆனது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 11.5 லட்சம் டன்னாக இருந்தது அதன் பின்னர் அது அந்த அளவைத் தாண்டவில்லை.
  • 2014–15 ஆம் ஆண்டில் 6.86 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி உற்பத்தி கடந்த ஆண்டு 2.1 லட்சம் பேல்களாகக் குறைந்துள்ளது.
  • கரும்பு உற்பத்தி 2006–07 ஆம் ஆண்டில் 411 லட்சம் டன்னாக இருந்த நிலையில், தற்போது சுமார் 133.5 லட்சம் டன்னாக கடுமையாகக் குறைந்துள்ளது.
  • பருவமழை சூழல்கள், சந்தை விலை ஏற்ற இறக்கங்கள், அரிசி தவிர பிற பயிர்களுக்கான கொள்முதல் இல்லாமை மற்றும் புதிய பயிர் வகைகள் கிடைக்காதது ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • வேளாண் துறையின் செயல்திறனை மேம்படுத்த, குறிப்பாக மழை பெய்யும் பகுதிகளில், தோட்டக்கலைப் பயிர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்