TNPSC Thervupettagam

தரங்கம்பாடி கடல்சார் பாரம்பரியம்

October 3 , 2026 4 days 74 0
  • 1620 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் தரையிறங்கிய டேனிஷ் கடற்படை கப்பலான 'எலிஃபண்ட்' (Elephant) கப்பலின் மாதிரி தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப் பட்டது.
  • தெற்காசியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த அனுப்பப்பட்ட 2 போர்க் கப்பல்கள் மற்றும் 3 வணிகக் கப்பல்கள் அடங்கிய கடற்படையின் ஒரு பகுதியாக எலிஃபண்ட் கப்பல் இருந்தது.
  • இந்தக் கடற்பயணமானது அட்மிரல் ஓவ் கெட்டே தலைமையில் மேற்கொள்ளப்பட்டு, 1620 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று தரங்கம்பாடியை வந்தடைந்தது.
  • பின்னர் தஞ்சாவூர் நாயக்கருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கெட்டே, தரங்கம்பாடியில் டான்ஸ்போர்க் கோட்டையை கட்டத் தொடங்கினார்.
  • இந்தக் கப்பல் மாதிரியானது டென்மார்க்கில் உள்ள கோகே கடல்சார் மாதிரி உருவாக்குநர்கள் சங்கத்தால் கட்டப்பட்டது.
  • இந்த மாதிரியானது டேனிஷ் தரங்கம்பாடி சங்கத்தால் தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்