TNPSC Thervupettagam

தரவு ஆளுமைக் கட்டமைப்பு - RBI

July 20 , 2026 7 days 156 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கிகள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கான (REs) தரவு ஆளுமை குறித்த ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகளுக்கான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) சட்டத்துடன் இணங்குவதை உறுதிசெய்யும் அதே வேளையில், தரவுக்கான தரம், பாதுகாப்பு, பொறுப்புக் கூறல் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதை இக்கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனமும் (RE) அதன் ஒட்டுமொத்த இடர் மேலாண்மை அமைப்புடன் இணைந்த தரவு ஆளுமைக் கட்டமைப்பை (DGF) நிறுவுவது அவசியமாகிறது.
  • இந்த வழிகாட்டுதல், தரவு உரிமையாளர்கள், தரவுப் பொறுப்பாளர்கள் மற்றும் தரவுப் பாதுகாவலர்களுக்கான தெளிவாக வரையறுக்கப்பட்ட பங்குகளுடன், வாரியம் மற்றும் நிர்வாக மட்டத்திலான தரவு ஆளுமைக் குழுக்களை கட்டாயமாக்குகிறது.
  • இது முக்கியமான தரவுகளுக்கு ஓர் ஒற்றை உண்மை ஆதாரத்தை (SSOT) அறிமுகப் படுத்துகிறது மற்றும் மறைகுறியாக்கம், தணிக்கைச் சோதனைகள் மற்றும் கால முறைத் தணிக்கைகள் போன்ற வலுவான கட்டுப்பாடுகளைக் கோருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்