தரவு ஆளுமைத் தரக் குறியீட்டில் தரவரிசைப் படுத்தப்பட்ட(DGQI) 66 அமைச்சகங்களில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம் (MoPSW) ஆனது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது நிதி ஆயோக் அமைப்பின் மேம்பாட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தினால் (DMEO) மேற்கொள்ளப் பட்டது.
இது நிர்வாகத் தரவு அமைப்புகளின் முழு நிறைவு நிலை மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் (CS) மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள் ஆகியவற்றினைச் செயல்படுத்துவதில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.