தரவுப் பரிமாற்ற ஒப்பந்தம் மீதான அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கை
March 30 , 2022 1330 days 526 0
நாடுகளுக்கிடையே தரவுப் பரிமாற்றத்திற்காக வேண்டி ஒரு புதியக் கட்டமைப்பினை உருவாக்குவாக்கும் நோக்கிலான ஓர் ஒப்பந்தத்தினை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அறிவித்துள்ளன.
கூகுள் மற்றும் மெட்டா போன்ற பல்வேறு தொழில்நுட்பப் பெருநிறுவனங்களுக்கான மிகவும் அவசியமான ஒரு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் ஐரோப்பாவின் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வேண்டி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் ஒரு முறை சாராத தனியுரிமைக் கவச அமைப்பினை மாற்றியமைக்கும் நோக்கத்தில் ஓர் ஒப்பந்தத்தினை ஓராண்டிற்கும் மேலாக அதிகாரிகள் திட்டமிட்டு வந்துள்ளனர்.