TNPSC Thervupettagam

தர்பார் முறைக்கு முடிவு

July 7 , 2021 1398 days 528 0
  • கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகர் மற்றும் குளிர்கால தலைநகரான ஜம்மு ஆகியவற்றுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலுவலகங்களை மாற்றியமைக்கும் 149 வருட பாரம்பரிய முறையை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
  • ஜம்மு & காஷ்மீரில் தர்பார் இடமாற்றத்தின் போதான ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளை நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
  • அம்மாநில ஊழியர்கள் இனிமேல் ஜம்மு அல்லது காஷ்மீர் மாநிலத்தில் நிலையாகக் குடியிருப்பர் என்பதை இது குறிக்கிறது.
  • டோக்ரா வம்ச மன்னர் மகாராஜா குலாப் சிங் 1872 ஆம் ஆண்டில் தலைநகரை மாற்றும் இந்தப் பாரம்பரிய முறையைத் தொடங்கி வைத்ததாக நம்பப்படுகிறது.
  • 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு & காஷ்மீரின் அரசியல் வர்க்கத்தினரால் இந்த முறை தொடரப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்