TNPSC Thervupettagam

தர்மா கார்டியன் பயிற்சி – 2022

February 27 , 2022 1401 days 641 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான 3வது தர்மா கார்டியன் – 2022 (EX DHARMA GUARDIAN-2022) பயிற்சியானது கர்நாடகாவின் பெலகாவி (பெல்காம்) எனுமிடத்தில் நடத்தப் படுகிறது.
  • இது 12 நாட்கள் நடைபெறும் ஒரு கூட்டுப் பயிற்சியாகும்.
  • இந்திய இராணுவத்தின் மராத்திய இலகுரக ஆயுதமேந்தியக் காலாட்படைப் பிரிவின் 15வது படைப்பிரிவு மற்றும் ஜப்பானிய தற்காப்பு தரைப் படையின் 30வது காலாட் படைப் பிரிவு ஆகியவை இப்பயிற்சியில் ஈடுபடுகின்றன.
  • இந்த இராணுவப் பயிற்சியில், காட்டுப்பகுதிகள் மற்றும் பகுதியளவு நகர/நகர்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் பற்றி அதிகம் கவனம் செலுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்