தற்காலிக நீதிபதிகள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
February 3 , 2025 98 days 184 0
நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் தேக்கத்தை நீக்குவதற்காக வேண்டி உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற அதன் முந்தைய நிபந்தனையை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
"ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கு மிகாமல் இரண்டு முதல் ஐந்து வரையிலான தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதற்கு 224Aவது சரத்தினைப் பயன்படுத்தி தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்" என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
224Aவது சரத்தானது, உயர் நீதிமன்றங்களின் அமர்வுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பது தொடர்பானதாகும்.
எந்தவொரு மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன், அந்த நீதிமன்றத்தின் அல்லது வேறு எந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி வகித்த எந்தவொரு நபரையும் அந்த மாநிலத்திற்கான ஒரு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்படுமாறு கோரலாம்.
அவ்வாறு கோரப்படும் ஒவ்வொரு நபரும், அத்தகைய பணியாற்றும் போது, குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் தீர்மானிக்கக் கூடிய சில கொடுப்பனவுகளுக்கான ஒரு உரிமையினைப் பெறுவார்.
மேலும் அவர் அனைத்து அதிகார வரம்பு, அதிகாரங்கள் மற்றும் சலுகைகளையும் அவர் பெறுவார், ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகக் கருதப்படமாட்டார்.