தற்கொலைகளைத் தடுப்பதற்காக தனிமைத்துவத்திற்கான அமைச்சர்
March 3 , 2021
1616 days
657
- ஜப்பானின் பிரதமரான யோஷிஹைடு சுகா அவர்கள் தனது அமைச்சரவையில் தனிமைத்துவத்திற்கான ஒரு அமைச்சரை சேர்த்துள்ளார்.
- கொரானா வைரஸ் தொற்றினால் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஜப்பானின் தற்கொலை விகிதமானது கடந்த 11 ஆண்டுகளில் தற்பொழுது முதன்முறையாக கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக அதிகரித்துள்ளது.
- 2018 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்ட முதலாவது நாடு ஐக்கிய இராஜ்ஜியம் ஆகும்.
Post Views:
657