2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் சிறு வணிக உரிமையாளர்கள் மத்தியில் தற்கொலைகளால் நிகழும் உயிரிழப்புகள் தேசிய அளவில் 30% அதிகரித்தது.
தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2020 ஆம் ஆண்டு விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் அறிக்கையில் இத்தகவல் கூறப் பட்டுள்ளது.
மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒட்டு மொத்தத் தற்கொலைகளின் எண்ணிக்கை என்பது அதிகமாக பதிவாகியுள்ளது.
சுயதொழில் செய்பவர்கள் மத்தியிலான தற்கொலைகள் தமிழ்நாட்டில் தான் அதிகம் பதிவாகியுள்ளன.
இது 2019 ஆம் ஆண்டில் இருந்ததை விட 36% அதிகரித்துள்ளது.