இந்தியப் பிரதமர் 21 ஆம் நூற்றாண்டில் உலகத்தை வழி நடத்தவிருக்கும் தற்சார்பு இந்தியாவின் 5 தூண்களை அறிவித்துள்ளார்.
பொருளாதாரமானது கூடுதல் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியையும் கொண்டு வர இருக்கின்றது.
கட்டமைப்பு வளர்ச்சியானது நவீன இந்தியாவின் அடையாளமாக இருக்கின்றது.
அடிப்படை அமைப்பானது கடந்த நூற்றாண்டின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதோடு மட்டுமல்லாமல், 21 ஆம் நூற்றாண்டின் கனவுகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் தொழில்நுட்பத்தால் செயல்படக் கூடியதாகவும் உள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகையானது நமது வலிமையாகவும் தற்சார்பு இந்தியாவிற்கான ஒரு ஆற்றல் மூலாதாரமாகவும் இருக்கின்றது.
தேவை : விநியோகச் சங்கிலி மற்றும் அதற்கான தேவையானது பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்ய இருக்கின்றது. இது அதன் முழுத் திறனையும் அடைவதற்கான வலிமையை வழங்க இருக்கின்றது.