TNPSC Thervupettagam

தலாசீமியா இரத்த சோகைக்கான வாய்வழி மருந்து

January 6 , 2026 2 days 40 0
  • தலாசீமியாவினால் பாதிக்கப்பட்ட வயது வந்த நோயாளிகளுக்கு இரத்த சோகைக்குச் சிகிச்சையளிப்பதற்கான முதல் வாய்வழி மருந்தினை/மாத்திரையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்துள்ளது.
  • அங்கீகரிக்கப்பட்ட மருந்தின் பெயர் மிட்டாபிவாட் என்பதாகும்.
  • இது இரத்தமாற்றம் சார்ந்த மற்றும் இரத்தமாற்றம் சாராத ஆல்பா மற்றும் பீட்டா-தலாசீமியா ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுவதற்காக அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
  • மிட்டாபிவாட் இரத்த சிவப்பணுக்களின் ஆயுளை மேம்படுத்துவதோடு, ஹீமோ குளோபின் அளவை அதிகரித்து பைருவேட் கைனேஸ் செயல்பாட்டை அதிகரிக்கும் ஒரு மருந்தாக செயல்படுகிறது.
  • இந்த மருந்து வழக்கமான/தொடர்ச்சியான இரத்த மாற்றங்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்