TNPSC Thervupettagam

தலைமை வழக்குரைஞர் K.K. வேணுகோபால் பதவிக் காலம் நீட்டிப்பு

July 1 , 2021 1495 days 667 0
  • தலைமை வழக்குரைஞர் K.K. வேணுகோபால் அவர்களின் பதவிக் காலத்தினை மேலும் ஒரு வருடத்திற்கு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
  • திரு. வேணுகோபால் அவர்கள் 2022 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி வரை அரசின் தலைமை சட்ட அதிகாரியாகப் பணியாற்றுவார்.
  • மத்திய அரசினால் இவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.
  • திரு. வேணுகோபால் அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தலைமை வழக்குரைஞராக ஒரு மூன்றாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.
  • 2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக இவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
  • 89 வயதான இவர் 15வது தலைமை வழக்குரைஞராக பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்