தலைமைத்துவ உறுதிப்பாட்டிற்கான ஐ.நா. பெண்கள் விருது, 2021
December 25 , 2021 1327 days 587 0
2021 ஆம் ஆண்டு பிராந்திய ஆசிய-பசிபிக் பெண்கள் அதிகாரமளிப்பு கொள்கைகள் என்ற விருது வழங்கும் விழாவில் திவ்யா ஹெக்டே என்பவருக்குத் தலைமைத்துவ உறுதிப்பாட்டிற்கான ஐ.நா. பெண்கள் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இவர் கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த, இந்தியப் பருவநிலை நடவடிக்கைத் துறையின் ஒரு தொழில்முனைவோர் ஆவார்.
பேயெரு சுற்றுச்சூழல் சேவைகள் என்ற தனது அமைப்புடன் சேர்ந்து பருவநிலை நடவடிக்கை முயற்சிகள் மூலமாக பாலினச் சமத்துவத்தை முன்னேற்றுவதற்காக அவர் ஆற்றி வரும் தொடர் முயற்சிகளுக்காக வேண்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.