இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் MM. நரவனே முப்படைத் தலைவர்களை உள்ளடக்கிய தலைமைப் பணியாளர் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 08 அன்று தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் இராணுவப் பணியாளர் தலைவர் பிபின் ராவத் அவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருந்தது.
முப்படைத் தலைவர்களில் மூத்தவர் என்பதால் ராணுவத் தளபதி ஜெனரல் MM. நரவனே தலைமைப் பணியாளர் குழுவின் தற்போதைய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.