மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆனது புது டெல்லியில் தளவாட தரவு வங்கி (LDB) 2.0 என்ற வசதியினை அறிமுகப்படுத்தியது.
LDB 2.0 பல் முனை ஏற்றுமதிகளில் MSME நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஆதரிக்கும் வகையில் நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை வழங்குவதன் மூலம் தளவாடச் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்தத் தளமானது உயர் (தொலைதூர) கடல் கொள்கலன் கண்காணிப்பை வழங்கி, இந்தியத் துறைமுகங்களுக்கு அப்பால் மற்றும் சர்வதேசக் கடல் பகுதிகள் முழுவதும் ஏற்றுமதி கொள்கலன்களின் தெரிவுநிலையை செயல்படுத்துகிறது.
இது கொள்கலன், சரக்குந்து, சரக்குந்து இழுவைகளின் எண்கள் மற்றும் இரயில்வே சரக்கு குறிப்பு சார்ந்த குறிப்புகள் வழியாக கண்காணிப்பதற்கான ஒருங்கிணைந்த தளவாட இடைமுக தளத்தின் (ULIP) APIகளுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
LDB 2.0 ஆனது கொள்கலன் விநியோகத்தைக் கண்காணிக்க ஒரு நேரடிக் கொள்கலன் வண்ணக் குறிப்பு வரைபடத்தை உள்ளடக்கியது என்பதோடு இது விநியோகச் சங்கிலி சிக்கல்களை நிவர்த்தி செய்வதில் பங்குதாரர்களுக்கு உதவுகிறது.