தவறான தகவல் வழங்கீட்டினை எதிர்ப்பதற்கான கூட்டணி என்பது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் ஒரு கூட்டணியாகும்.
இது தவறான தகவல் வழங்கீடுகளை எதிர்த்துப் போராடுவதையும் உண்மைத் தகவல் குறித்தச் சரிபார்ப்புச் செயல்முறைக்கு உதவும் கருவிகளை உருவாக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில், 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கிட வேண்டி இயங் கலையில் வெளியாகும் போலிச் செய்திகளைக் கண்டறிந்துக் கட்டுப்படுத்தச் செய்வதற்கான ஒரு சுயக் கட்டுப்பாட்டு அமைப்பாகச் செயல்படுவதற்கு ஒரு அனுமதி கோரி அரசாங்கத்தினை இது அணுகியுள்ளது.
இது தற்போது பூம் லைவ், ஃபேக்ட்லி, தி லாஜிக்கல் இந்தியன், விஸ்வாஸ் நியூஸ் மற்றும் தி குயின்ட் போன்ற செய்தி வெளியீட்டு ஊடகங்கள் போன்ற 14 எண்ணிமச் செய்தி வெளியீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பாக உள்ளது.
தவறான தகவல் வழங்கீட்டினை எதிர்ப்பதற்கான கூட்டணியில், உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்க எந்தவொரு நிறுவனத்திற்கும் வாய்ப்பு உண்டு.