- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது.
- த.வெ.க முன்னர் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருந்தது; இந்த அங்கீகாரமானது அதன் 'விசில்' தேர்தல் சின்னத்தை ஒதுக்கித் தர அனுமதிக்கிறது.
- தமிழ்நாட்டில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 233 இடங்களில் 108 இடங்களை 34.92% வாக்கு சதவீதத்துடன் த.வெ.க வென்றது.
- புதுச்சேரியில், போட்டியிட்ட 28 இடங்களில் 2 இடங்களை 16.85% வாக்கு சதவீதத்துடன் த.வெ.க வென்றது.
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப் படுவதற்கான நிபந்தனைகள்
- ஒரு மாநிலம்/ஒன்றியப் பிரதேசத்தில் பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்தால் ஒரு அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
- மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 6% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் குறைந்தது 2 சட்டமன்ற இடங்களை வென்றிருக்க வேண்டும்.
- மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 6% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் குறைந்தது 1 மக்களவை இடத்தையாவது வென்று இருக்க வேண்டும்.
- மொத்தச் சட்டமன்ற இடங்களில் குறைந்தது 3% இடங்கள் அல்லது 3 இடங்கள், இதில் எது அதிகமோ அதனை வென்றிருக்க வேண்டும்.
- மக்களவையில் மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு 25 இடங்களுக்கும் குறைந்தது 1 மக்களவை இடத்தையாவது வென்றிருக்க வேண்டும்.
- மாநிலச் சட்டமன்ற அல்லது மக்களவைத் தேர்தலில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது 8% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப் படுவதற்கான நிபந்தனைகள்
- இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்தால் ஒரு அரசியல் கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
- மக்களவை/சட்டமன்றத் தேர்தல்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் குறைந்தது 4 மக்களவை இடங்களை வென்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 3 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் மொத்த மக்களவை இடங்களில் குறைந்தது 2% இடங்களை வென்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 4 மாநிலங்களிலாவது மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
