தாக்குதலிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான ஐநா சபையின் சர்வதேச தினம் - செப்டம்பர் 09
September 13 , 2024 309 days 221 0
இது உலகெங்கிலும் உள்ள கடும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் குழந்தைகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கத்தார் முன் வைத்த தீர்மானத்திற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில், 22,557 குழந்தைகளுக்கு எதிராக சுமார் 32,990 கடுமையான வன்முறைகள் நடந்துள்ளன.
உலகளவில் சுமார் 72 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மோதல் காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் உள்ளனர்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 10,000 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.