தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 09
September 11 , 2020 2195 days 865 0
பறைசாட்டப்பட்ட தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினமானது முதன்முறையாக 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
இந்தத் தினமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒருமித்த முடிவினால் ஏற்படுத்தப் பட்டதாகும். இது பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழும் லட்சக் கணக்கான குழந்தைகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யுனெஸ்கோ மற்றும் யுனிசெப் ஆகியவற்றுடன் இணைகின்றது.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதி கொண்டாட்டத்தின் போது ‘அனைத்திற்கும் மேலானது கல்வி’ என்ற அமைப்பானது “#Unite To Protect” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகின்றது.
இது அதன் பங்காளர்களான யுனிசெப், யுனெஸ்கோ மற்றும் ‘நமது எதிர்காலத்தைப் பாதுகாப்போம் என்ற பிரச்சாரம்’ ஆகியவற்றுடன் இணைந்து தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான ஓர் உலகளாவிய பிரச்சாரமாகும்.