தொலைக்காட்சி மற்றும் சினிமா திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை நோக்கி மாபெரும் மகத்தான பங்களிப்பினை ஆற்றிய பொழுதுபோக்கு தொழிற்துறையைச் சேர்ந்த தனிமனிதர்களை கவுரவிப்பதற்காக 2018-ஆம் ஆண்டின் தாதா சாகேப் பால்கே சிறப்புத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள விருதுகளானது தாதா சாகேப் பால்கே சிறப்புத்துவ விருதுகளின் 4-வது பதிப்பாகும்.
இந்த தாதா சாகேப் பால்கே விருதுகளானது மும்பையில் அமைந்துள்ள தாதா சாகேப் பால்கே அறக்கட்டளையால் (Dadasaheb Phalke Foundation) வழங்கப்படுகின்றது.