தாதாபாய் நௌரோஜி 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 ஆம் தேதியன்று பிறந்தார்.
இலண்டனில் உள்ள ஃபின்ஸ்பரி மத்திய தொகுதியிலிருந்து 1892 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவர் ஆவார்.
பார்சி சமூகத்தைச் சீர்திருத்துவதற்காக வேண்டி 1851 ஆம் ஆண்டில் இரஹ்னுமாய் மஸ்தயாசன் சபையை அவர் நிறுவினார்.
1854 ஆம் ஆண்டில் ராஸ்ட் கோஃப்தார் எனும் குஜராத்தி மொழி செய்தித் தாளினை (உண்மை விளம்பி) தொடங்கினார்.
1845 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் இந்தியர் இவர் ஆவார் என்பதோடு 1854 ஆம் ஆண்டில் அதன் முதல் இந்தியப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.
1848 ஆம் ஆண்டில் இலக்கிய மற்றும் அறிவியல் சங்கத்தை நிறுவிய இவர், 1849 ஆம் ஆண்டில் மும்பையில் பெண்களுக்காக ஆறு பள்ளிகளைத் தொடங்கினார்.
நௌரோஜி அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பரோடாவின் திவானாக (முதலமைச்சர்) சிறிது காலம் பணியாற்றினார் ஆனால் ஒரு மாதத்திற்குள் அதனை அவர் இராஜினாமா செய்தார்.
காமா அண்ட் கம்பெனியில் பணி புரிந்த பிறகு, இங்கிலாந்தில் பருத்தி வர்த்தக நிறுவனமான தாதாபாய் நௌரோஜி அண்ட் கம்பெனியை அவர் நிறுவினார்.
பிரிட்டிஷ் சட்டமியற்றுபவர்கள் முன் இந்தியாவின் வழக்கை முன் வைக்க 1867 ஆம் ஆண்டு ஆண்டில் இலண்டனில் கிழக்கு இந்தியச் சங்கத்தை நிறுவினார்.
Drain Theory என்று அழைக்கப்படும் அவரது பொருளாதார விமர்சனப் புத்தகமானது, பிரிட்டிஷ் ஆட்சியானது இந்தியாவின் செல்வத்தை எவ்வாறு சுரண்டியது என்பதைக் வெளிக் கொணர்வதற்காக அதிகாரப்பூர்வத் தரவுகளைப் பயன்படுத்தியது.
நௌரோஜி அவர்கள் 1876 ஆம் ஆண்டில் "Poverty of India" மற்றும் 1901 ஆம் ஆண்டில் "Poverty and Un-British Rule in India" ஆகிய புத்தகங்களை எழுதினார்.
1886, 1893 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸில் மூன்று முறை தலைவராக இருந்தார்.
நௌரோஜி அவர்கள் 1905 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற சோசலிச சர்வதேச மாநாட்டில் அவரது 80 வயதில் கலந்து கொண்டார்.