மௌசம் திட்டத்தின் கீழ் முப்பரிமாண முறையில் அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி வானிலை நிலையங்களை (AWS) உருவாக்கியுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் தலைமையில் செயல்படுகிறது.
இந்த AWS நிலையங்களின் முதல் தொகுதி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டெல்லியில் பயன்பாட்டுக்கு வரும்.
மௌசம் திட்டம் என்பது வானிலைக் கண்காணிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தச் செய்வதற்காக 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேசியத் திட்டமாகும்.
இந்த நிலையங்கள் வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம் மற்றும் மழைப் பொழிவை தானாகவே பதிவு செய்து நிகழ்நேரத்தில் தரவை அனுப்புகின்றன.
புதிய AWS நிலையங்கள் சூரிய சக்தியில் இயங்கும், மேலும் மேக் இன் இந்தியா முன்னெடுப்பின் கீழ் இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்படுகின்றன.