TNPSC Thervupettagam

தானியச் சேமிப்பு சீர்திருத்தங்கள்

December 14 , 2025 3 days 39 0
  • முதன்மை வேளாண் கடன் சங்கங்களில் (PACS) அதிக உணவு தானியச் சேமிப்பை உருவாக்குவதற்காக அரசாங்கம் ஆனது 2023 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய தானியச் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கியது.
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF), வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்புத் திட்டம் (AMI), வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணைத் திட்டம் (SMAM), மற்றும் சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் பிரதான் மந்திரி முறைப்படுத்தல் (PMFME) போன்ற திட்டங்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் கிடங்குகள் மற்றும் பிற வசதிகளை உருவாக்குகிறது.
  • AIF திருப்பிச் செலுத்துதல் 2+8 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டதாலும், AMI கட்டுமானச் செலவு மெட்ரிக் டன்னிற்கு 7,000 ரூபாய் (சமவெளி) மற்றும் மெட்ரிக் டன்னிற்கு 8,000 ரூபாய் (வடகிழக்கு) ஆகவும் உயர்த்தப்பட்டதாலும் கடன் விதிகள் எளிதாக்கப்பட்டன.
  • PACS தற்போது 33.33% மானியத்தைப் பெறுகிறது என்ற நிலையில் மேலும் சாலைகள், எடைப் பாலங்கள் மற்றும் பிற ஆதரவுப் பணிகளுக்கு கூடுதல் உதவியைப் பெறுகிறது.
  • இந்திய உணவுக் கழகம் (FCI) ஆனது 2,500 மெட்ரிக் டன் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான கிடங்குகளுக்கு 9 ஆண்டு கால பணியமர்த்தல் உத்தரவாதத்தை வழங்கச் செய்கிறது.
  • சுமார் 704 தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 59,702 மெட்ரிக் டன் சேமிப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டத்தில் தற்போது அனைத்து கூட்டுறவுக் குழுக்களும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்