மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், தான்சானியாவின் அருஷாவில் நடைபெறும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் (IPU) 153 வது சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் இந்திய நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
தேசிய நாடாளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பான சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU) 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
நாடுகளுக்கிடையே நாடாளுமன்ற உரையாடல், ஜனநாயகம், அமைதி, மனித உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்த IPU செயல்படுகிறது.
இச்சபைக் கூட்டத்தின் கருத்துரு "அனைவருக்குமான உள்ளடக்கம், நம்பிக்கை மற்றும் வாய்ப்புகள் மூலம் நல்லாட்சியை மேம்படுத்துதல் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரமளித்தல்" என்பதாகும்.
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதி மற்றும் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), சுகாதாரம், பருவநிலை மாற்றம் மற்றும் பெண்களின் பங்கேற்பு ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெறும்.