தான்யா.M மற்றும் கேரள மாநிலம் மற்றும் பிற அரசுகளுக்கு இடையிலான ஒரு வழக்கு
June 20 , 2025 12 days 78 0
குற்றவியல் வழக்குத் தொடரலுக்கு மாற்றாகவோ அல்லது பிணை உத்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவோ தடுப்புக் காவலின் மிகவும் அசாதாரணமான நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
S.K. நஸ்னீன் மற்றும் தெலுங்கானா மாநில அரசு (2023) மற்றும் நெனாவத் புஜ்ஜி மற்றும் திர் தெலுங்கானா மாநில அரசு (2024) ஆகிய வழக்குகளை மேற்கோள் காட்டி, 'பொது ஒழுங்கு' மற்றும் 'சட்ட ஒழுங்கு' ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
2007 ஆம் ஆண்டு கேரள மாநிலச் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இது தொடர்பான பிற முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்
ரேகா மற்றும் தமிழ்நாடு மாநில அரசிற்கு இடையிலான வழக்கு (2011),
விஜய் நாராயண் சிங் மற்றும் பீகார் மாநில அரசிற்கு இடையிலான வழக்கு (1984),
இச்சு தேவி மற்றும் இந்திய ஒன்றியத்திற்கு இடையிலான வழக்கு (1980) மற்றும்
A.K. கோபாலன் மற்றும் சென்னை மாகணத்திற்கு இடையிலான வழக்கு (1950)
தடுப்புக் காவல் ஆனது அரசியலமைப்பின் 22(3)(b)வது சரத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
தடுப்புக் காவல் அதிகாரம் ஆனது 21 சரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள விதி விலக்காகும், எனவே, முதன்மைத் தீர்ப்பிற்கு விதிவிலக்காக, அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும்.
தடுப்புக் காவல் விதி என்பது அரசின் பொறுப்பில் உள்ள குறைவாகவே பயன்படுத்தப் பட வேண்டிய ஓர் அசாதாரண அதிகாரமாகும்.
மேலும் இது, குற்றம்(குற்றங்கள்) செய்யப்படும் என்று எதிர்பார்த்து ஒரு தனிநபரின் சுதந்திரத்தைக் குறைக்கிறது என்பதால் சாதாரணச் சூழலில் அதைப் பயன்படுத்தக் கூடாது.
ஒரு நபர் ஒரு தகுதி வாய்ந்த குற்றவியல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப் படும் போது, அந்த குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட வேண்டிய அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுப்புக் காவல் உத்தரவின் செல்லுபடித் தன்மையை ஆராய்வதில் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.