தாமரை இலை போன்ற சூரிய சக்தியில் இயங்கும் ஆவியாக்கிகள்
July 18 , 2025 16 hrs 0 min 21 0
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அறிவியலாளர்கள் ஒரு புதிய நீர் விலக்குத் தன்மை கொண்ட கிராஃபீன் அடிப்படையிலான ஒரு பொருளை உருவாக்கினர்.
இது நீர் உப்பு நீக்கத்தினை மிக எளிதாக்கும் மற்றும் உலகில் நிலவி வரும் நன்னீர் நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் ஒரு குறிப்பிடத்தக்கத் திருப்புமுனையாக அமைய உதவும்.
பூமியில் நீர் ஏராளமாக இருந்தாலும், அதில் சுமார் 3% மட்டுமே நன்னீர் ஆகும்.
அதில், 0.05 சதவீதத்திற்கும் குறைவான நீரே எளிதில் அணுகக் கூடியதாக உள்ளது.
இருபக்க மீநிலை நீர் விலக்குத் தன்மை கொண்ட சீரொளிக் கற்றையினால் தூண்டப் பட்ட கிராஃபீன் (DSLIG) ஆவியாக்கி ஆனது, முந்தைய ஆவியாக்கிகளின் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது மற்றும் மிகவும் பெரிய அளவிலான பெரும் பயன்பாடுகளுக்கான திறனைக் கொண்டுள்ளது.
சூரிய ஆற்றல் அடிப்படையிலான உப்பு நீக்க முறைகள் அவற்றின் குறைவான கார்பன் தடம் காரணமாக பயன்பாட்டிற்குத் தேர்வு செய்யப்படுவதில்லை.
இருப்பினும், அதன் செறிவு மற்றும் சூரிய ஒளியின் கிடைக்கும் தன்மையில் ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஒளியை உறிஞ்சுவதில் ஏற்படும் குறைப்பு விகிதங்கள் போன்ற காரணிகள் சூரிய ஆற்றல் அடிப்படையிலான உப்புநீக்க நுட்பங்களின் செயல்திறன் மற்றும் நிலைத் தன்மையை பெரிதும் பாதிக்கின்றன.