TNPSC Thervupettagam

தாமரை விதைகள் உற்பத்தி

December 20 , 2025 14 hrs 0 min 44 0
  • உலகின் தாமரை விதைகளில் ((மக்கானா) கிட்டத்தட்ட 80 சதவீதத்தினை இந்தியா உற்பத்தி செய்கிறது என்பதோடு இது நரிக் கொட்டை அல்லது கோர்கன் கொட்டை என்றும் அழைக்கப் படுகிறது.
  • மக்கானா என்பது குளங்கள் மற்றும் ஈரநிலங்களில் வளரும் யூரியால் ஃபெராக்ஸ் எனும் ஒரு நீர்வாழ் தாவரத்தின் உண்ணக் கூடிய வகையிலான விதையாகும்.
  • இதில் தர்பங்கா ஒரு முக்கியச் சாகுபடி மற்றும் பதப்படுத்துதல் மையமாக உள்ளதுடன் இந்தியாவின் மக்கானா உற்பத்தியில் பீகார் சுமார் 85% பங்களிக்கிறது.
  • ஓர் உழைப்பாளர் தேவை மிகுந்த நீர்வாழ் பயிரான இது, விவசாயிகள் மற்றும் மீனவர் சமூகங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
  • சத்துக்கள், புரதம், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த மக்கானா, குறைந்த கிளைசெமிக் கொண்டது மற்றும் இருதய நலத்திற்கு உகந்தது.
  • மதிப்புக் கூட்டல், ஏற்றுமதி மற்றும் உலகளாவியச் சந்தை அணுகலை அதிகரிக்க அரசாங்கம் தேசிய மக்கானா வாரியத்தை அமைத்து 476.03 கோடி ரூபாய் திட்டத்திற்கு (2025–31) ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்