தாமிரபரணி நதியில் நிலவும் மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஆனது, நீர் வளங்காவலர் இராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்துள்ளது.
இந்த உத்தரவு ஆனது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதியன்று பிறப்பிக்கப் பட்டது.
இராஜேந்திர சிங் ஒரு ரமோன் மகசேசே விருது பெற்ற நபர் ஆவார்.
"இந்தியாவின் நீர் மனிதர்" என்றும் அழைக்கப்படும் ராஜேந்திர சிங், புகழ் பெற்ற இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் நீர் பாதுகாப்பாளர் ஆவார்.
நதியின் நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்துவதற்கு அவருக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.
அவர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தச் செய்வதற்கான தீர்வு நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பார்.