தாமிரபரணி நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பின் 11வது பதிப்பு
February 17 , 2021 1621 days 656 0
இது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது.
இது 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 10வது நீர்ப்பறவைகள் கணக்கெடுப்புடன் ஒப்பிடும் பொழுது அங்கு பறவைகளின் எண்ணிக்கையானது கணிசமான அளவில் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது.
அந்தக் கணக்கெடுப்பில் 74 இனங்களைச் சேர்ந்த 24,411 பறவைகள் காணப்பட்டன.
இந்த ஆண்டில், சைபீரியா மற்றும் மங்கோலியா ஆகியவற்றிலிருந்து வந்த ஆயிரக் கணக்கான வலசை போகும் பறவைகள் உள்ளிட்ட 73 இனங்களைச் சேர்ந்த 26,862 பறவைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.