TNPSC Thervupettagam

தாமிரபரணியில் நீர்நாய் வாழ்விடம்

June 18 , 2026 15 hrs 0 min 31 0
  • தாமிரபரணி நதியில் நீர்நாய்களின் இயற்கையான வாழ்விடம் அழிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
  • தாமிரபரணி நதியானது, தாம்ரபரணி அல்லது பொருநை என்றும் அழைக்கப் படுகிறது என்பதோடு இது முற்றிலும் தமிழ்நாட்டிற்குள் ஓடும் ஒரு அரிய வற்றாத நதி ஆகும்.
  • இது மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் உள்ள அகத்தியர்கூடம் சிகரத்தில் உற்பத்தியாகி, வங்காள விரிகுடாவில் உள்ள மன்னார் வளைகுடாவில் கலக்கிறது.
  • இந்த நதி சுமார் 128 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக பாய்கிறது.
  • கடனாநதி, மணிமுத்தாறு மற்றும் பச்சையாறு ஆகியவை இதன் முக்கிய துணை நதிகள் ஆகும் என்ற நிலையில் மேலும் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் கடனாநதி அணைகள் இதன் முக்கிய அணைகளாகும்.
  • சுமார் 669 மீன் இனங்களுடன் வளமான பல்லுயிர்த் தன்மையைக் கொண்ட இந்த நதியானது, யூரேசியன் நீர்நாய், மென்மையான-உரோமன் உடைய நீர்நாய் மற்றும் ஆசிய சிறிய-நகம் கொண்ட நீர்நாய் ஆகிய மூன்று நீர்நாய் இனங்களும் வாழும் இந்தியாவின் சில நதிகளில் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்