தாயகம் திரும்பிய புரு அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் தளர்வு
August 20 , 2018 2551 days 844 0
மத்திய உள்துறை அமைச்சகமானது திரிபுராவிலிருந்து மிசோரம் மாநிலத்திற்கு குடி பெயர்ந்த புரு புலம்பெயர்வோருக்கான விதிமுறைகளை தளர்த்துவதாக ஒப்புதல் அளித்து ‘நான்கு முனை ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது ஜூலை 2018ல் இந்திய அரசாங்கம், மிசோரம் மற்றும் திரிபுரா அரசாங்கம் மற்றும் புரு இடம் பெயர்ந்த மக்கள் மன்றம் ஆகியவற்றிற்கிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.
தளர்வுகள்
புரு அகதிகளுக்கு ரூ.4 லட்சம் பண உதவியாக கிடைக்க குறைந்த பட்ச தங்கு காலம் 3 வருடத்திலிருந்து 2 வருடமாக தளர்த்தப்பட்டுள்ளது. (அல்லது ஒன்றரை வருடம் கூட)
அவர்கள் திரும்பி வந்தவுடன் உடனடியாக ரூ.4 லட்ச உதவித் தொகையில் 90% வங்கி கடனாக பெறலாம். மேலும் நிதியுதவிக்கான விதிமுறைகளும் தளர்த்தப்படலாம்.
கட்டிட உதவியானது ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் பெறலாம்.