முதியோர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
பொது விநியோகத் திட்ட (PDS) நியாயவிலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வசதியை இத்திட்டம் வழங்குகிறது.
இத்திட்டத்திற்கான தகுதி வயதை 70-லிருந்து 60 ஆகக் குறைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் கூடுதலாக சுமார் 4 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, சுமார் 20 லட்சம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 34,000-க்கும் மேற்பட்ட பொது விநியோகத் திட்ட (PDS) கடைகள் மூலம் ரேஷன் பொருட்களை தங்கள் வீடுகளிலேயே பெறுகின்றனர்.