August 15 , 2025
15 hrs 0 min
36
- தமிழ்நாட்டு முதலமைச்சர் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று தாயுமானவர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டமானது 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை வழங்குகிறது.
- இது மாநிலம் முழுவதும் 21.7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பலன் அளிக்கும்.
- பொது விநியோக முறையின் (PDS) கீழ் உள்ள 34,809 நியாய விலைக் கடைகளில் இருந்து வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
- ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
- தமிழ்நாட்டில் தற்போது 37,328 ரேஷன் கடைகள் உள்ளன என்பதோடு கடந்த நான்கு ஆண்டுகளில் 2,394 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
Post Views:
36