தா முயென் தோம் என்ற கோயிலின் மீதான உரிமை கோரல் காரணமாக தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மோதல்கள் வெடித்தன.
இந்த மோதல் ஆனது 11 ஆம் நூற்றாண்டின் இந்துக் கோவிலான பிரியா விஹார் மீதான இரு நாடுகளின் உரிமைக் கோரலை மையமாக கொண்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஆனது 1962 ஆம் ஆண்டில் முடிவு செய்து 2011 ஆம் ஆண்டில் அந்தக் கோயில் கம்போடியாவிற்குச் சொந்தமானது என்று மீண்டும் ஒரு முறையாக உறுதிப் படுத்தியது ஆனால் தாய்லாந்து அதனைச் சுற்றியுள்ள நிலத்தின் மீது உரிமை கோருதலை முன் வைக்கிறது.
கெமர் பேரரசால் கட்டப்பட்ட இந்தக் கோயிலானது கலாச்சாரப் பெருமையின் பெரும் அடையாளமாகவும், தேசியவாத பதட்டச் சூழலுக்கான ஓர் இடமாகவும் உள்ளது.