தாய்லாந்தின் நாடாளுமன்றம் ஆனது வணிக அதிபர் அனுடின் சார்ன்விரகுலை நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
தாய்லாந்து இரண்டு ஆண்டுகளில் அதன் மூன்றாவது பிரதமரை நியமித்தது.
கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையைக் கையாண்டதில் நெறிமுறை மீறல்களுக்காக பேடோங்டார்ன் ஷினவத்ரா சமீபத்தில் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பேடோங்டார்ன் ஷினவத்ரா தாய்லாந்தின் மிகவும் அதிகாரம் வாய்ந்த அரசியல் வம்சத்தைச் சேர்ந்தவர்.
2023 ஆம் ஆண்டு தாய்லாந்து பொதுத் தேர்தலில் progressive Move Forward Party என்ற கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பியூ தாய் கட்சி மற்றும் conservative establishment parties கட்சி ஸ்ரெத்தா தாவிசின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தன.
ஸ்ரெத்தா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற நிலையில் அவருக்குப் பிறகு பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவியேற்றார்.
தாய்லாந்தின் அனுடின் சார்ன்விரகுல் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஷினவத்ரா குடும்பத்தின் ஆளும் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து, ஒரு வார கால குழப்பம் மற்றும் அரசியல் முடக்கங்களை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.