TNPSC Thervupettagam

தார் பந்துகள் மேலாண்மை விதிகள் 2026

April 8 , 2026 4 days 79 0
  • கடலோரப் பகுதிகளைப் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தார் பந்துகள் மேலாண்மை விதிகள் (வரைவு), 2026-ஐ வெளியிட்டுள்ளது.
  • தார் பந்துகள் என்பது கடலில் மிதக்கும் அல்லது கடற்கரைகளில் கரை ஒதுங்கும் சிறிய, ஒட்டும் தன்மையுடைய எண்ணெய் கட்டிகளாகும்.
  • கடலில் சிந்தப்பட்ட கச்சா எண்ணெய் ஆவியாதல், நீருடன் கலத்தல் மற்றும் கடினமாதல் போன்ற இயற்கை சிதைவு செயல்முறைகளுக்கு உள்ளாகும்போது இவை உருவாகின்றன.
  • தார் பந்துகளானது ஹைட்ரோகார்பன்கள், அஸ்பால்டீன்கள் மற்றும் மணல், நுண் நெகிழிகள் போன்ற கசடுகளைக் கொண்டுள்ளன.
  • இவை மீன்கள், பறவைகள் மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதோடு, பவளப் பாறைகள் மற்றும் கடல் புல்வெளிகளையும் சேதப் படுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்