கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் தாலிபன்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாயினைச் சந்தித்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் மூலம் தாலிபன் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை அரசு தணித்துள்ளது.
இந்தியாவின் ஒரே ஒரு தேவை “ஆப்கானிஸ்தான் நாடானது இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்காகவும் தீவிரவாதத்திற்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது” என்பதேயாகும்.