தாலேட்டுகள் – இருதயக் குழாய் நோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள்
May 18 , 2025 95 days 95 0
உலகளவில் 2018 ஆம் ஆண்டில் 55 முதல் 64 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே இருதயம் சார்ந்த நோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவற்றுக்கு தாலேட்டுகள் முக்கியப் பங்களிப்புக் காரணியாக உள்ளன.
இந்தச் செயற்கை இரசாயனங்களானது, உணவுச் சேமிப்பு கொள்கலன்கள், ஷாம்பு, ஒப்பனைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போன்ற நுகர்வோர் பொருட்களில் காணப்படுகின்றன.
நெகிழிப் பொருட்களை மேலும் நெகிழ்வு தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் டை-2-எத்தில்ஹெக்ஸைல் தாலேட் (DEHP) என்ற ஒரு வேதிப் பொருளானது இருதய நோய் சார்ந்த உயிரிழப்புகளுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
55 முதல் 64 வயதுடையவர்களில் சுமார் 103,587 உயிரிழப்புகளுடன், உலகளவில் DEHP காரணமாக ஏற்பட்ட இருதய நோய் சார்ந்த உயிரிழப்புகளானது, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
ஒரு முக்கிய நெகிழி உற்பத்தியாளரும் நுகர்வோருமான சீனாவில், இது போன்ற 33,858 உயிரிழப்புகளைப் பதிவாகியுள்ளதுடன், சுமார் 52,219 உயிரிழப்புகளைக் கொண்ட அளவில் இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக அது மூன்றாவது இடத்தைப் பிடித்தது.