ஆளில்லா விமானங்கள் மற்றும் மேம்பட்ட வான்வழி வாகனங்களின் இயக்கத்தினை மையமாகக் கொண்ட தாழ் மட்ட நிலையிலான வான்வழி இயக்கத்திற்கான (LAE) இந்தியாவின் மையமாக மாறுவதற்கான ஓர் உள்கட்டமைப்பு செயல் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது.
LAE ஆனது 3,000 மீட்டர் வரையிலான உயரம் வரை மேற்கொள்ளப்படும் வான்வழி நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
இதில் அதிகரித்து வரும் ஆளில்லா விமானத் தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் மனிதர்கள் கொண்ட மற்றும் ஆளில்லா அமைப்புகள் அடங்கும்.
மாநில அரசானது இந்தியாவின் முதல் ஆளில்லா விமான சோதனை மையத்தை வல்லம் வடகலில் உள்ள SIPCOT வளாகத்தில் அமைத்துள்ளது.
இது செட்டிநாடு விமான நிலையத்தில் BVLOS (காட்சிப் புலனாகும் நிலைக்கு அப்பால்) வசதிகளையும் உருவாக்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு, வான்வழி வாடகை வாகன நிலையங்கள் (வெர்டிபோர்ட்கள்), ஆளில்லா விமான வழித்தடங்கள், பயிற்சி வழித்தடங்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை விவரிக்கின்ற தனது மாபெரும் திட்டத்தினை 2025 ஆம் ஆண்டு LAE மன்றத்தில் வெளியிட உள்ளது.