TNPSC Thervupettagam

தாவர அடிப்படையிலான காயச் சுற்றுத் துணி

September 16 , 2025 14 hrs 0 min 18 0
  • கேரளாவின் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JNTBGRI) அறிவியலாளர்கள், சிவப்பு முறிவொட்டி செடியைப் பயன்படுத்தி ஒரு காயச் சுற்றுத் துணியை உருவாக்கினர்.
  • இந்தத் தாவரம், உள்ளூரில் முறிகூட்டிப் பச்சை (ஸ்ட்ரோபிலாந்தஸ் ஆல்டர்னேட்டா) என்று அழைக்கப்படுகிறது.
  • இது அகந்தேசி குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இந்தியா உள்ளிட்ட வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்கிறது.
  • ஆராய்ச்சியாளர்கள் சிவப்பு முறிவொட்டி செடியிலிருந்து உயிரியியக்கச் சேர்மமமான ஆக்டியோசைடை பிரித்து, அதை முதல் முறையாக தாவரத்தின் பாரம்பரிய காயம் குணப்படுத்தும் பயன்பாட்டுடன் ஒருங்கிணைத்தனர்.
  • காயச் சுற்றுத் துணி மின்னியல் ரீதியாக நெய்யப்பட்ட (எலக்ட்ரோ-ஸ்பன்) நுண் இழைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் ஆக்டியோசைடு (0.2%), நியோமைசின் சல்பேட் மற்றும் FDA அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மக்கும் பலபடி சேர்மங்களைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்