TNPSC Thervupettagam

தாவர இனங்கள் கண்டுபிடிப்பு – 2020

September 25 , 2021 1414 days 573 0
  • இந்தியத் தாவரவியல் ஆய்வு அமைப்பானது தனது புதிய வெளியீடான 2020 ஆம் ஆண்டு தாவர இனங்கள் கண்டுபிடிப்பு அறிக்கையில் 267 புதிய இனங்களை நாட்டின் தாவர இனங்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • இவற்றுள் 119 பூக்கும் தாவரங்கள், 3 டெரிடோஃபைட்டுகள், 5 பிரையோபைட்டுகள், 44 லைகன்கள், 57 பூஞ்சைகள், 21 பாசிகள் மற்றும் 18 நுண்ணுயிர் தாவரங்கள் ஆகியவை அடங்கும்.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 புதிய, பெரிய மற்றும் நுண்ணிய பூஞ்சை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • 22% கண்டுபிடிப்புகளானது மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அதனைத் தொடர்ந்து மேற்கு இமாலயத்திலும் (15%), கிழக்கு இமாலயத்திலும் (14%) மற்றும் வடகிழக்கு மலைகளிலும் (12%) கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்