- ஜம்முவில் கனமழையால் தாவி நதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
- தாவி நதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள படேர்வா அருகே உள்ள கைலாஷ் குண்ட் பனிப்பாறையிலிருந்து உருவாகிறது.
- பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டத்தில் நுழைவதற்கு முன்பு தோடா, உதம்பூர் மற்றும் ஜம்மு மாவட்டங்கள் வழியாக பாய்கிறது.
- சிந்து நதி அமைப்பின் ஒரு பகுதியான செனாப் நதியில் இடது கரை துணை நதியாக இந்த நதி இணைகிறது.
- 141 கிலோ மீட்டர் நீளத்திலான இந்த நதி இந்திய எல்லை வரையில் 2,168 சதுர கி.மீ. நீர்ப் பிடிப்புப் பகுதி கொண்டது.
- இதன் முக்கியத் துணை நதிகளில் ராஜி, கோவ் கரண் மற்றும் வற்றாத நீரோட்டத்தை வழங்கும் பருவகால ஓடைகள் அடங்கும்.

Post Views:
32