TNPSC Thervupettagam
May 19 , 2020 1917 days 885 0
  • இது புது தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அமைப்பான திட்டம் 39A எனும் அமைப்பினால் வெளியிடப்படும் ஒரு அறிக்கை ஆகும்.
  • இந்த ஆய்வானது மத்தியப் பிரதேசம், தில்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசத்தினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • மரண தண்டனைகள் இங்கு அதிகமாக வழங்கப்படுவதன் காரணமாக இந்த மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • தில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் சமூகத்தின் கூட்டு உளச்சான்றின் அடிப்படையில் மரண தண்டனையை வழங்குகின்றன.
  • “சமூகத்தின் கூட்டு உளச்சான்று” என்ற கருத்தின் அடிப்படையில் மரண தண்டனை வழங்குவது நியாயம் என்ற வாதம் 1983 ஆம் ஆண்டு மச்சி சிங் (எதிர்) பஞ்சாப் அரசு என்ற வழக்கின் தீர்ப்பில் இந்திய உச்ச நிதிமன்றத்தினால் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. 
  • சமீபத்தில் கூட்டு உளச்சான்றானது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திய வழக்கான முகேஷ் எதிர் தில்லி தேசியத் தலைநகர்ப் பகுதி அரசு என்ற தில்லி கூட்டுப் பாலியல் வழக்கில் 2017 ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டது.
  • இந்த ஆய்வானது பச்சன் சிங் எதிர் பஞ்சாப் அரசு என்ற வழக்கின் 1980 ஆம் ஆண்டுத் தீர்ப்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட தண்டனைச் செயல்முறையை விசாரணை நீதிமன்றங்கள் கடைபிடிப்பதில்லை என்பதையும் கண்டறிந்து  வெளிப்படுத்தியுள்ளது.
  • இந்த வழக்கில், இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒரு அரசியலமைப்பு அமர்விடம் மரண தண்டனையின் அரசியலமைப்பு செல்லுபடித் தன்மை குறித்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் ஏ.பி.ஷா அவர்களின் தலைமையிலான சட்ட ஆணையமானது மரண தண்டனையை ஒழிக்கப் பரிந்துரைத்தது.
  • எனினும், சட்ட ஆணையம் இந்தப் பரிந்துரையை தீவிரவாதச் செயல்கள்  தொடர்பற்ற வழக்குகளுக்கு மட்டுமே வழங்கியுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்