TNPSC Thervupettagam

தினசரி வேலை நேர நீட்டிப்பு

September 8 , 2025 16 hrs 0 min 12 0
  • தனியார் துறை ஊழியர்களுக்கான அதிகபட்சத் தினசரி வேலை நேரத்தை ஒன்பது மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இதற்காகத் தொழிற்சாலைகள் சட்டம், 1948 மற்றும் மகாராஷ்டிரா கடைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2017 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்படும்.
  • இதனால் கூடுதல் வேலை நேர வரம்புகள் அதிகரிக்கும் என்பதோடு மேலும் தொழிலாளர்கள் கட்டாய எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் அதற்கான சரியான இழப்பீட்டைப் பெறுவார்கள்.
  • இந்த மாற்றங்கள் முதலீட்டை ஈர்ப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்