TNPSC Thervupettagam

திபாங் பல்நோக்கு நீர்மின் நிலையம்

March 7 , 2023 1137 days 571 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் மிகப்பெரிய நீர்மின் நிலையத்தினை அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தப் பல்நோக்கு பயன்பாட்டுத் திட்டம் ஆனது திபாங் ஆற்றில் சீனாவின் எல்லைக்கு அருகில் அமைக்கப்படுகிறது.
  • திபாங் நீர்மின் நிலையத்தினைக் கட்டமைப்பதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்த நீர்மின் நிலையத்தினைத் தேசிய நீர் மின்னாற்றல் கழக (NHPC) லிமிடெட் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட உள்ளது.
  • திஹாங், திபாங் மற்றும் லோஹித் ஆகியவை பிரம்மபுத்திரா நதியின் முக்கிய துணை நதிகள் ஆகும்.
  • திப்ரு-சைகோவா என்ற சரணாலயத்திற்கு அருகில் திபாங் நதி லோஹித் நதியுடன் இணைகிறது.
  • திபாங் நதியின் துணை நதிகள் எம்ரா, இதுன், டிரி, ரங்கோன், மாதுன் மற்றும் சிசார் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்