சீன நாடானது, ஒரு குறுங்கோளிலிருந்து மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சிக்காக என்று புவிக்குக் கொண்டு வருவதற்கான நாட்டின் முதல் ஆய்வுப் பயணமாக தியான்வென் 2 என்ற விண்வெளி ஆய்வுக் கலத்தினை விண்ணில் ஏவியுள்ளது.
இது புவிக்கு அருகிலுள்ள காமோ'ஓலேவா (2016 HO3 என்றும் குறிப்பிடப் படுகிறது) என்ற ஒரு சிறிய, அசாதாரணமான குறுங்கோளினை நோக்கிச் செல்கிறது.
இது 2027 ஆம் ஆண்டின் ஒரு நாளில் பூமிக்கு அதன் மாதிரிகளை கொண்டு வரும்.
இந்த குறுங்கோள் ஆனது, ஆரம்பகாலச் சூரியக் குடும்பமானது எவ்வாறு உருவானது என்பதை அறிவியலாளர்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும் பண்டைய பொருட்களைக் கொண்டுள்ள ஒரு "உலவும் புதைபடிவமாகும்".
தியான்வென் 2 ஆனது 311P என்ற வால் நட்சத்திரத்தினையும் ஆராய உள்ளது.
இந்த வால் நட்சத்திரம் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள முக்கியக் குறுங் கோள் மண்டலத்தில் 311P சுற்றி வருகிறது.