அறிவியலாளர்கள் சீரோளிக் கற்றைகள் (லேசர்கள்) மற்றும் ஊடு கதிர்களைப் பயன்படுத்தி தீவிர வெப்பம் மற்றும் அழுத்தத்தின் கீழ் உருவாகின்ற திரவ கார்பனை ஆய்வு செய்தனர்.
அணு கட்டமைப்பு ஆனது ஒரு எளிய திரவத்தைப் போலலல்லாமல், வைரத்தின் கட்டமைப்பினை ஒத்திருப்பது இதுவரையுள்ள நமது புரிதலை மறுவடிவமைக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பு கிரகங்கள் மற்றும் அணுக்கரு இணைவு உலைகளில் காணப் படும் சூழல்களின் கீழ் கார்பனின் நடத்தையை வெளிக் கொணர்வதன் மூலம் கிரக அறிவியல், இணைவு ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் பொருள் அறிவியலுக்கு உதவுகிறது.
திரவ கார்பன் என்பது சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்த நிலைமைகளின் கீழ் இயற்கையாகவே நிலையானதாக இல்லாத திரவ நிலையில் உள்ள கார்பனைக் குறிக்கிறது.
கார்பன் என்பது பொதுவாக கிராஃபைட், வைரம் போன்ற திட வடிவங்களில் அல்லது ஆக்ஸிஜனேற்றப் படும் போது வாயுவாக (CO₂) உள்ளது.
கார்பன் சாதாரண அழுத்தத்தின் கீழ் உருகாது; மேலும் இது திடப்பொருளிலிருந்து வாயுவாக (பதங்கமாதல்) நேரடியாக மாறுகிறது என்பதால் இது ஆய்வக அடிப்படையிலான திரவ கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதை கிட்டத்தட்ட சாத்தியம் அற்றதாக்குகிறது.
திரவ கார்பனை உருவாக்க, பூமியின் வளிமண்டலத்தை விட 10 மில்லியன் மடங்கு அதிகமான அழுத்தங்கள் மற்றும் 4,500°C வெப்பநிலை போன்ற தீவிர நிலைமைகள் தேவைப்படுகின்றன.
எந்தப் பொருளும் உருகாமல் இந்த சூழ்நிலைகளைத் தாங்க முடியாது என்பதால் வழக்கமான முறைகள் தோல்வியடைகின்றன.
திரவ கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் வைரத்தின் அமைப்பைப் பிரதிபலிக்கின்றன (ஆனால் திரவ வடிவத்தில்), மேலும் 4 அண்டை அணுக்களைக் கொண்டுள்ளன.
இது எளிமையான திரவ அமைப்பின் முந்தைய அனுமானங்களுக்கு சவால் விடுக்கிறது.
சகப் பிணைப்புகளுடன் நீரின் ஹைட்ரஜன் பிணைக்கப்பட்ட வலையமைப்பைப் போன்ற இந்த அமைப்பானது சிக்கலானது மற்றும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையானது அதிக அழுத்தத்தின் கீழ் கார்பனின் உருகுநிலையைக் குறைத்து, முந்தைய தத்துவார்த்த மாதிரிகளில் உள்ள முரண்பாடுகளைத் தீர்த்தது.
திரவ கார்பன் மாபெரும் கிரகங்களின் மையங்களில் (எ.கா., நெப்டியூன், யுரேனஸ்) மற்றும் வெண்ணிற குள்ள நட்சத்திரங்களில் உள்ளது.
அதன் நடத்தையைப் புரிந்து கொள்வது கிரக உருவாக்கம் மற்றும் இயக்கவியலின் மாதிரிகளை மேம்படுத்துகிறது.
செயலற்ற கட்டுப்படுத்தப்பட்ட இணைவு (ஒரு தூய்மையான ஆற்றல் கருத்து) கார்பன் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்துகிறது.
கார்பனின் திரவ பண்புகளை அறிவது செயல் திறம் மிக்க உலைகளை வடிவமைக்க உதவுகிறது.